கர்நாடகாவை உலுக்கிய அறிக்கை.. 18-25 வயது இளைஞர்களுக்கு HIV பரவியது எப்படி? விவரம் இதோ – hiv study involving 7,000 young people aged 18–25 in karnataka has revealed findings

கர்நாடகா மாநிலத்தில் எய்ட்ஸ் தடுப்பு சங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து மாநிலத்தில் உள்ள அனைத்து பொறியியல் மற்றும் பட்டப்படிப்பு கல்லூரி மாணவர்களுக்கும் எச்.ஐ.வி. பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்க ஒருங்கிணைந்த சுகாதார முகாம்களை நடத்த விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளன.இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கர்நாடகாவில் அதிகரிக்கும் எச்.ஐ.வி. தொற்று

இந்தியாவில் சமீபகாலமாக எச்.ஐ.வி. தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மாநிலம் வாரியாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு பரிசோதனை நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையின் படி, இந்தியாவிலேயே எச்.ஐ.வி. தொற்றுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கையில் கர்நாடகா மாநிலம் தான் மூன்றாவது இடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது.

திமுக பாஜக கூட்டணியா?நெருக்கடியில் திமுக? காரணம் இதுதானா?

மேலும் கர்நாடகா மாநிலத்தில் தற்போது சுமார் 2.60 லட்சம் பேர் எச்.ஐ.வி. தொற்றுடன் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் அவர்களில் 2.05 லட்சம் பேர் ஆன்டிரெட்ரோவைரல் தெரபி (ART) சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கபட்டு உள்ளது. அதே நேரத்தில் சுமார் 54,000 பேர் தங்களுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது குறித்து அறியாமல் இருப்பது சுகாதாரத்துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் KSAPS வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி கர்நாடகாவில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மத்தியில் எச்.ஐ.வி. தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த வயது பிரிவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2023-24ஆம் ஆண்டில் 44,500 ஆக இருந்த நிலையில், 2025-26ஆம் ஆண்டில் 66,600 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

7,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று

இதில் குறிப்பாக 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் சுமார் சுமார் 54,000 பேர் இன்னும் எச்.ஐ.வி. பரிசோதனை செய்யாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து மாநிலஅரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் என அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் எச்.ஐ.வி. பரிசோதனை மற்றும் ஆலோசனைக்கான ஒருங்கிணைந்த சுகாதார முகாம்களை நடத்த VTU மற்றும் கல்லூரிக் கல்வித்துறையிடம் KSAPS கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் அனைத்து பட்டப்படிப்பு மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களிலும் எச்.ஐ.வி. குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் மத்திய கல்வி அமைச்சகமும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.

ஏன் இந்த நிலை?

இளைஞர்களிடையே எச்.ஐ.வி பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாதது, பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் போதைப்பொருள் பயன்பாடு (ஊசி மூலம் போதை மருந்து செலுத்துதல்) போன்றவை இந்தத் தொற்று பரவுவதற்கு முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

எச்.ஐ.வி. தொற்று கண்டறிய செயலி

எச்.ஐ.வி. தொற்று கண்டறிய Mobilisation for AIDS Suraksha (MAS) திட்டம் திட்டத்தை கர்நாடகா அரசு கொண்டு வந்துள்ளது. இதில் , உடல் ரீதியாக கேட்கப்படும் கேள்விகளுக்கு எச்.ஐ.வி. தொற்றுடன் இருப்பவர்களில் 95 சதவீதம் பேர் தங்களது நிலையை அறிந்துகொள்வதை உறுதி செய்வது குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும் , பின்னர் , தொற்று இருப்பது கண்டறியப்பட்டவர்களை உரிய சிகிச்சை அளிக்கப்படும். மேலும், ‘Know Your HIV Status’ என்ற திட்டத்தின் கீழ், QR குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட ‘HIV Self-Risk Assessment Tool’ உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தங்களது உடல்நிலை மற்றும் தொற்று ஏற்படும் அபாயம் குறித்து ஆரம்ப கட்டத்தில் தெரிந்துகொள்ள முடியும். இந்த டிஜிட்டல் வசதி மூலம் தனிநபர் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
Source link