இதில், நடிகர் பிருத்வி பாண்டியராஜன் “முருகேசன்” என்ற கதாபாத்திரத்திலும், கே.எஸ். ரவிக்குமார் “கந்தசாமி” என்ற கதாபாத்திரத்திலும், ஸ்ரீஜா ரவி “தனம்” என்ற கதாபாத்திரத்திலும், மமிதா பைஜூ “செல்லி” என்ற கதாபாத்திரத்திலும், கருணாஸ் “காசி மாயன்” என்ற கதாபாத்திரத்திலும், சுராஜ் வெஞ்சரமூடு “பரதன்” என்ற கதாபாத்திரத்திலும் நடிப்பதை படக்குழு உறுதிப்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், கர திரைப்படத்தின் முகங்கள் என குறிப்பிட்டு புது வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் படத்தில் உள்ள முக்கிய கதாபாத்திரங்கள் இடம்பெறும் காட்சிகள் டீசர் போன்று இடம்பெற்றுள்ளன. இந்தப் படம் வருகிற ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
