'கல்பனா சாவ்லா' விருது பெற்ற மாற்றுத்திறனாளி திடீர் போராட்டம்

சென்னை: கடந்த 2010ல் வீரமங்கை ‘கல்பனா சாவ்லா’ விருது பெற்ற மாற்றுத்திறனாளியான, தடகள பயிற்சியாளர் தீபா, பணி நிரந்தரம் கோரி, நேற்று தலைமை செயலகத்தில், போராட் டத்தில் ஈடுபட்டார்.

மதுரை மாவட்டம், எல்லீஸ் நகரைச் சேர்ந்த, தடகள பயிற்சியாளர் தீபா. இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச போட்டியில், மூன்று வெள்ளி உட்பட ஆறு பதக்கங்கள் வென்றுள்ளார்.

இவரது திறமையை பாராட்டி, கடந்த 2010ல் தமிழக அரசின் வீரமங்கை, ‘கல்பனா சாவ்லா’ விருது, அன்றைய முதல்வர் கருணாநிதியால் வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு அரசு பணி வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த 2023ல் தீபாவிற்கு, மதுரை மாவட்ட, பகுதி நேர தடகள பயிற்சியாளர் பணிக்கான நியமன ஆணை வழங்கப்பட்டது.

நிரந்தர பணி வழங்கப்படவில்லை. இதனால், அதிருப்தியடைந்த பயிற்சியாளர் தீபா, பணி நிரந்தரம் கோரி, நேற்று தலைமை செயலக வளாகத்தில், திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

சட்டசபை நடந்து கொண்டிருந்தபோது, அவர் போராட்டத்தில் ஈடுபட்டதால், போலீசார் அவரை சமாதானப்படுத்தி, அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

Source link