கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள் அருகே இறைச்சி, மீன் விற்க தடை; பீஹார் அரசு முடிவு

பாட்னா: பீஹாரில் வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இறைச்சி, மீன் விற்பதற்கு தடை விதிக்க அம்மாநில அரசு முடிவு எடுத்துள்ளது.

இதுகுறித்து துணை முதல்வர் விஜய்குமார் சின்ஹா கூறி உள்ளதாவது;

மாநில அரசின் புதிய முயற்சியாகும். பீஹாரானது மாறி வருகிறது என்பதற்கு இதுவே அடையாளம். மேலும் சுகாதாரம், சமூக நல்லிணக்கத்திற்கும் இப்படியான முடிவு அவசியமானது.

உணவில் எங்களுக்கு என்ன பிரச்னையும் கிடையாது. யாருடைய உணர்வுகளும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படக்கூடாது என்பது எங்களின் எண்ணம். மக்கள் இதை பின்பற்ற வேண்டும். இந்த முடிவானது எந்த சமூகத்தையோ, உணவின் விருப்பத்தையோ நோக்கமாக கொண்டு இருக்கவில்லை.

இவ்வாறு துணை முதல்வர் விஜய்குமார் சின்ஹா கூறினார்.

2017ம் ஆண்டு உத்தரப்பிரதேச அரசானது வழிபாட்டுத்தலங்களுக்கு அருகில் இறைச்சி விற்பனை செய்வதை தடை செய்தது, குறிப்பிடத்தக்கது.

Source link