அசாமிலும் மிக அதிகப்படியான வாக்குப்பதிவு. காரணம் எஸ்ஐஆர் மூலமாக வாக்குகள் நீக்கப்பட்டிருப்பது இயற்கையாகவே வாக்கு சதவீதத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. புதுச்சேரியிலும், அசாமிலும் ‘ப்ரோ-இன்கும்பன்சி’ அதாவது ஆளுகின்ற அரசு நமக்கு மீண்டும் வேண்டும். அசாமில் என்டிஏ பாரதிய ஜனதா கட்சி அரசு மீண்டும் வேண்டும். புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான என்டிஏ ஆட்சி மீண்டும் வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்.
இது தமிழகத்திலும் எதிரொலிக்கும். மே 4-ஆம் தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்கும் போது தமிழகம் முழுவதும் ஒரு எழுச்சியான சூழல் உருவாகும்.
தமிழக வெற்றி கழகம் மற்றும் சீமான் களத்தில் இருந்தாலும், தேர்தல் என்று வந்துவிட்டால் அது இருமுனைப் போட்டியாகத்தான் இருக்கும். ஒன்று ஆளும் திமுக, மற்றொன்று அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி.
எடப்பாடி பழனிசாமி கருத்தை முதல்வர் ஸ்டாலின் தவறான ஒரு சூழலில் பேசுகிறார். கனிமொழி எங்களை யாராவது எதிர்த்துப் பேசினால் ‘மலர் வளையம்’ வைப்போம் என்று கூறுகிறார், இது மிரட்டல் இல்லையா?
மேலும், நட்சத்திரப் பேச்சாளராக இருக்கும் அவர் இதுவரை திமுகவின் ஒரு கூட்டத்தில் கூட பங்கேற்கவில்லை. அந்த ஆடியோவில் அவர் முதல்வரின் திறன் பற்றியும், 2ஜி வழக்கு பற்றியும் பேசியுள்ளது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். இது எங்களுடைய பிரச்சாரத்துக்கு இன்னும் வலுசேர்த்துள்ளது” என்று அவர் கூறினார்.
