கள்ளக்காதலனுடன் செல்வேன் என அடம்பிடித்த மனைவியை போலீஸ்காரர் முன்பு கொன்ற கணவர்

ஆந்திர மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் ஜரசங்கம் அடுத்த தும்மன் பள்ளியை சேர்ந்தவர் சித்தா ரெட்டி (வயது 35). இவர் ஹூசுரா பாத்தில் பானி பூரி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி கவிதா (29). டைலரிங் வேலை செய்து வந்தார். தம்பதிக்கு 9 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் திருப்பதி அடுத்த சந்திரகிரியை சேர்ந்த பவன்குமார் ரெட்டி (32) என்பவருடன் கவிதாவுக்கு பேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் நட்பாக பழகி வந்தனர்.

பின்னர் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்தனர். கவிதா தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ முடிவு செய்தார்.

அதன்படி கடந்த மாதம் 27-ந்தேதி கவிதா கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டு திடீரென காணாமல் போனார். மனைவியை பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து கவிதாவின் செல்போனை ஆய்வு செய்ததில் அவர் ஜட்சர்லாவில் இருப்பது தெரிய வந்தது. மனைவியை அழைத்து வர சித்தா ரெட்டி போலீஸ்காரர் ஒருவருடன் காரில் ஜட் சர்லா சென்றார். போலீஸ்காரர் கவிதாவை தன்னுடைய கணவருடன் வருமாறு சமாதானம் செய்தார். கள்ளக்காதலனை விட்டு வர முடியாது என கூறிய கவிதா தனது கணவரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டினார்.

இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இருவரையும் சமாதானம் செய்த போலீஸ்காரர் காரில் கணவன், மனைவிக்கு இடையே தான் அமர்ந்து கொள்வதாக தெரிவித்தார். இதற்கு கவிதா ஒப்புக்கொள்ளவில்லை.

போலீஸ்காரர் காரின் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டார். பின் இருக்கையில் கவிதா, அவரது கணவர் மற்றும் பவன் குமார் ரெட்டி ஆகியோர் அமர்ந்து கொண்டனர்.

கார் சதாசிவபேட்டை அடுத்த நந்தி கண்டி அருகே சென்று கொண்டு இருந்தது. அங்கிருந்த கடையில் டீ குடிக்க டிரைவர் காரை நிறுத்தினர்.

காரில் இருந்து இறங்கிய சித்தா ரெட்டி அங்குள்ள கடைக்கு சென்று கத்தி ஒன்றை வாங்கி தனது பாக்கெட்டில் மறைத்து வைத்துக் கொண்டார்.

டீ குடித்து முடித்த பிறகு கார் மீண்டும் புறப்பட்டது. மனைவி மீது கடும் ஆத்திரத்தில் இருந்த சித்தா ரெட்டி தனது பாக்கெட்டில் இருந்த கத்தியை எடுத்து ஆவேசமாக மனைவியின் கழுத்தை அறுத்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர் சித்தா ரெட்டியிடம் இருந்த கத்தியை பிடுங்கினார். அதற்குள் கவிதாவின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது.

கவிதாவை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் கவிதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link