கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிப்பு!

கவிஞர் வைரமுத்துவிற்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

1972இல் ‘வைகறை மேகங்கள்’ என்ற முதல் கவிதை நூலை எழுதிய வைரமுத்து கவிதைகள், நாவல்கள் உள்ளிட்ட 40 நூல்களை எழுதியிருக்கிறார்.

அதுமட்டுமின்றி சினிமாவில் கிட்டத்தட்ட 7500 பாடல்கள் எழுதியிருக்கிறார்.

கவிஞர் வைரமுத்து

‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ படைப்புக்கு சாகித்ய அகாடமி விருதையும், இந்தியாவின் உயர்ந்த இலக்கியப் பரிசுகளுள் ஒன்றான சாதனா சம்மான் விருதையும் மற்றும் இலக்கியப் பங்களிப்புக்காக இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ – பத்மபூஷண் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

சிறந்த பாடலுக்கான தேசிய விருதை 7 முறை பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் இவர்தான். இந்நிலையில் இந்திய இலக்கியத்தின் உயரிய விருதாகக் கருதப்படும் ஞானபீடம் விருது கவிஞர் வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்து

இந்த விருதை தமிழில் இதுவரை 1975-ல் எழுத்தாளர் அகிலனும், 2002-ல் ஜெயகாந்தனும் மட்டுமே பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link