கவுகாத்தி: மும்பை, ராஜஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் லீக் போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டது.

கவுகாத்தி: மும்பை, ராஜஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் லீக் போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டது.

இந்தியாவில் கிரிக்கெட் லீக் தொடரின் 19 வது சீசன் நடக்கிறது. சென்னை, மும்பை, நடப்பு சாம்பியன் பெங்களூரு உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன.

நேற்று கவுகாத்தியில் நடந்த போட்டியில் ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை அணி, 2008ல் கோப்பை வென்ற ராஜஸ்தானை எதிர்கொண்டது. இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரம் 15 வயது வைபவ், முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை முதன் முறையாக சந்திக்க இருந்ததால் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டன.

ஆனால், நேற்று மாலை கவுகாத்தியில் கன மழை கொட்டித் தீர்த்தது. பின் மழை நின்ற போதும், வானிலை ஈரப்பதமாக காணப்பட்டது. போட்டி துவங்கும் முன் மீண்டும் மழை பெய்யத் துவங்கியது. இதனால் ‘டாஸ்’ நிகழ்வும் தாமதம் ஆனது.

தொடர்ந்து இரவு வரை மழை நீடித்ததால் போட்டி நடப்பது சந்தேகமாக உள்ளது.

Source link