கவுகாத்தி: லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம், பொது சிவில் சட்டம், பெண்கள் உதவித்தொகை உயர்வு என்பன 31 தேர்தல்

கவுகாத்தி: லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம், பொது சிவில் சட்டம், பெண்கள் உதவித்தொகை உயர்வு என்பன 31 தேர்தல் வாக்குறுதிகளை பாஜ அறிவித்துள்ளது.

அசாமில் உள்ள 126 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 9 ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது. ஓட்டுகள் 4ம் தேதி எண்ணப்பட உள்ளன. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் பிரசாரம் உச்சகட்ட நிலையில் இருக்கிறது.

இந்நிலையில், பாஜவின் தேர்தல் அறிக்கையை கவுகாத்தியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

அதில் உள்ள முக்கிய அம்சங்கள்

* பொது சிவில் சட்டம் இயற்றப்படும்

* பூர்வகுடிகளின் நிலம், பாரம்பரியம் மற்றும் கண்ணியத்தை பாதுகாக்க நடவடிக்கை

* வங்கதேச ஊடுருவல்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மீட்டெடுக்கப்படும்

*லவ் ஜிகாத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை

* நெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும்

*வெள்ள பாதிப்பு ஏற்படாதவாறு கட்டமைப்பை வலுப்படுத்த முதல் மற்றும் இரண்டு ஆண்டுகளில் ரூ.18 ஆயிரம் கோடி செலவு செய்யப்படும்

* அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் வேலைவாய்ப்புகள்

*ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி, ஒரு பல்கலை, ஒரு பொறியியல் கல்லூரி

* பெண்கள், சுய உதவி குழுக்கள் மூலம் ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்

* இந்தியாவின் கிழக்கு நுழைவுவாயில் அசாம் என்பதை உறுதி செய்ய 5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்

* அசாம் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் ரூ.500 ஆக அதிகரிக்கப்படும்.

* தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீடுகட்டி கொடுக்கப்படும். என்பன உள்ளிட்ட 31 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

Source link