காகித வடிவிலான பங்குகளை 'டிமேட்' செய்ய ஓராண்டு அவகாசம்

ப ழைய காகித வடிவிலான பங்கு சான்றிதழ்களை வைத்திருப்பவர்கள், அவற்றை தங்கள் பெயருக்கு மாற்றி, ‘டிமேட்’ கணக்குக்கு கொண்டு வர, செபி ஓராண்டு கால அவகாசம் வழங்கியுள்ளது.

பங்கு பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவும், மோசடிகளை குறைக்கவும் கடந்த 2019, ஏப்., 1ம் தேதி முதல் அனைத்து பங்கு மாற்றங்களும், ‘டிமேட்’ வடிவில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என செபி தெரிவித்திருந்தது.

ஆனால், காகித வடிவில் பங்குகளை வைத்திருந்த முதலீட்டாளர்களுக்கு, பல நடைமுறை சிக்கல்களும், ஆவணங்கள் சார்ந்த சவால்களும் ஏற்பட்டதால் அவற்றை டிமேட் கணக்குக்கு மாற்ற முடியாமல் சிரமப்பட்டு வந்ததாக தெரிவித்தனர்.

இந்த சூழலில், தற்போது செபி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், காகித வடிவிலான பங்குகளை டிமேட் கணக்குக்கு மாற்ற ‘சிறப்பு சாளர சலுகை’ வரும் பிப்., 5ம் தேதி துவங்கப்படும்; இந்த சலுகை 2027ம் ஆண்டு பிப்., 4ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

இந்த சிறப்பு சாளரம் வாயிலாக, சிக்கலான சட்ட நடைமுறைகள் இன்றி, முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை டிமேட் கணக்குக்கு மாற்ற அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link