‘காக்டெய்ல்-2’ படத்தில் ராஷ்மிகா மந்தனா

ஷாகித் கபூர், கிருத்தி சனோன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘காக்டெய்ல்-2’. வருகிற ஜூன் 19-ந்தேதி படம் திரைக்கு வருகிறது. இதையொட்டி ராஷ்மிகா மந்தனா ‘காக்டெய்ல்-2’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா, ஷாகித் கபூர், கிருத்தி சனோன் ஆகியோரின் படங்கள் வெளியாகி சில மணி நேரங்களில் லட்சக்கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது. ஏற்கனவே படத்தின் முதல் தோற்றம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

காதல், நட்பு மற்றும் உறவு சிக்கல்களை பற்றி இந்த படம் பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு ராஷ்மிகா நடிப்பில் வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Source link