நமது நிருபர்
‘இந்த தேர்தலில், 41 தொகுதி கள், இரண்டு ராஜ்யசபா எம்.பி., பதவி, ஆட்சியில் பங்கு’ என்பதில் காங்கிரஸ் மேலிடம் விடாப்பிடி யாக இருந்ததும், த.வெ.க.,வுடன் கூட்டணி வைக்க, காங்கிரசில் ஒரு தரப்பினர் முயற்சி மேற்கொண்டதும், தி.மு.க.,வை கோபப்படுத்தி யது. இதனால், துவக்கத்தில் காங்கிரசுடன் பேசுவதை, தி.மு.க., தள்ளிப்போட்டு வந்தது. ஆனால், கடைசி நேரத்தில் தி.மு.க.,வுடன் பேசுவதை காங்கிரசும் தாமதப்படுத்தியது.
கடந்த 26 தேதி இரவு செல்வப்பெருந்தகையை தொடர்பு கொண்ட டி.ஆர்.பாலு, 27ம் தேதி பேச்சு நடத்த வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த தகவலை, ஊடகங்களுக்கு தமிழக காங்கிரஸ் தெரிவித்தது. ஆனால், காங்கிரஸ் மேலிடம் இதற்கு அனுமதி அளிக்கவில்லை.
இந்நிலையில், 27ம் தேதி மாலை த.வெ.க., தலைவர் விஜய் மனைவி விவாகரத்து கேட்டு, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு பற்றிய தகவல் வெளியானது. அதன்பின்னரே, தி.மு.க.,வுடன் அதிகாரப்பூர்வ பேச்சு நடத்த, காங்கிரஸ் மேலிடம் அனுமதி அளித்து உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், விஜய் மனைவி தாக்கல் செய்த மனு, திடீரென நேற்று முன்தினம் வெளியானதன் பின்னணியில் தி.மு.க., இருப்பதாகவும், காங்கி ரஸ் மேலிடத்தை வழிக்கு கொண்டு வர, இதை துருப்புச் சீட்டாக பயன் படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
