கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வரும் 2028 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ள நிலையில், அவருக்கு எதிராக போரிக்கைகள் வலுத்து வருகிறது. இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அப்போது முதலமைச்சர் பதவிக்காக சித்தராமையா மற்றும் டி கே சிவகுமாருக்கு இடையே போட்டி நிலவியது. இதனைத் தொடர்ந்து டெல்லி காங்கிரஸ் தலைமை இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதலமைச்சராக ஆட்சி செய்யவும், அடுத்து இரண்டரை ஆண்டுகள் டி .கே .சிவகுமார் கர்நாடக முதலமைச்சராக ஆட்சி செய்யவும் முடிவு செய்து ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனையடுத்து சித்தராமைய கர்நாடக முதலமைச்சராக மூன்று ஆண்டுகள் பதவி வகித்து வந்தார்.
இனி எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்
இந்த நிலையில்,ஒப்பந்தத்தின்படி. தன்னுடைய பதவி காலம் முடிவடைந்த நிலையில் டி கே சிவகுமாரை முதலமைச்சராக பதவியேற்கசெய்ய வேண்டும் டெல்லி தலைமையிடம் வலியுறுத்தி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் ஜூன் 3-ம் தேதி டி.கே. சிவகுமார் கர்நாடக முதலமைச்சராக பதவியேற்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் வரும் 2028 சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என சுத்த ராமையா தெரிவித்துள்ளது காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக பாஜக கூட்டணியா?நெருக்கடியில் திமுக? காரணம் இதுதானா?
சித்தராமையா அறிவிப்பு எதிராக வலுக்கும் கோரிக்கைகள்
மாண்டியா மாவட்டம் கே ஆர் பேட்டை பகுதியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கலந்து கொண்டார். இப்போது நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: வரும் 2028 நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை தற்போது உள்ள அரசியல் சூழல் சீர்குலைந்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களுக்கு பணம் வழங்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. என்று வேதனையாக தெரிவித்தார். மேலும் தேர்தல் அரசியலில் இருந்து தான் விலகினாலும் பொது வாழ்க்கையில் தொடர்ந்து மக்களுக்காகவும், மக்களின் பிரச்சினைக்காகவும் நான் எப்போதும் குரல் கொடுப்பேன் என்று கூறினார்.
தனக்கு தற்போது 79 வயதாகிறது என்றும், அரசின் தற்போதைய பதவிக்காலம் முடிவடையும் போது 81 அல்லது 82 வயதை எட்டியிருப்பேன் என்றும் அவர் கூறினார். வயது மற்றும் உடல்நிலை காரணமாக முன்புபோல் முழு உற்சாகத்துடன் பணியாற்ற முடியாத சூழல் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த முடிவு தற்போது அவரது ரசிகர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன், சிலர் வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
அரசியலில் பொருத்தமான வழிகாட்டி
பெங்களூரு ஊரக மாவட்டம், தேவனஹள்ளி அருகே உள்ள கே.ஐ.ஏ.பி-யில் ஊடகங்களிடம் பேசிய எலபுர்கா சட்டமன்ற உறுப்பினர் பசவராஜ ராயரெட்டி அவர் 2028 தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று செய்தித்தாள்களில் பார்த்தேன். ஆனால் அவர் ஓய்வு பெறக்கூடாது. என்று கூறினார். சித்தராமையா ஓய்வு பெற்றாலும், அரசியலில் பொருத்தமான வழிகாட்டி யாரும் இல்லை என்பது போலாகும். அவரை மற்றொரு தேர்தலில் போட்டியிடுமாறு நான் கேட்டுக்கொள்வேன் என்றார்.
காங்கிரஸ் கட்சிக்கு சித்தராமையா தேவை
சித்தராமையா எந்தக் காரணத்திற்காகவும் ஓய்வு பெற மாட்டார். காங்கிரஸ் கட்சிக்கு சித்தராமையா தேவை. மாநிலம் கண்ட மிகச்சிறந்த அரசியல்வாதி அவர். சித்தராமையா ஓய்வு பெறுவதற்கு இடமே இல்லை. எதிர்காலத்திலும் கட்சிக்கு அவர் தேவைப்படுவார் என்று நான் உணர்கிறேன் மாநிலங்களவை உறுப்பினர் ஜி.சி. சந்திரசேகர் என்றார்.
Source link
