காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் தயாரிப்பாளர் சங்க தலைவர் ஜிகேஎம் தமிழ்குமரன்!

2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தங்களது பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் பிரதான கட்சிகளான திமுக-வும் அதிமுக-வும் தங்களது கூட்டணிக் கட்சிகளுடன் கூட்டணி பங்கீட்டை முடித்து பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். 

இந்த சூழலில் பல்வேறு கட்சியினர் வேறு கட்சிக்கு தாவுகின்றனர். சிலர் புதிதாகக் கட்சி தொடங்குகின்றனர். சிலர் புதிதாகக் கட்சியின் சேர்கின்றனர். அந்த வகையில் யாரும் எதிர்பாராத விதமாகச் சுந்தர் சி புதிய நீதிக்கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக களம் காண்கிறார். இந்த நிலையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தலைவர் ஜிகேஎம் தமிழ் குமரன் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, கே.சி.வேணுகோபால் முன்னிலையில் இணைந்துள்ளார். 

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு பென்னாகரம் தொகுதி ஒதுக்கப்பட்டதால் அதில் தமிழ்குரன் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. தற்போது அத்தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இவரின் தந்தையும் பாமக முன்னாள் தலைவருமான ஜிகே மணி இருந்து வருகிறார். இந்த சூழலில் அவரது மகன் காங்கிரஸில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இவர் ஏற்கனவே ராமதாஸ் – அன்புமணி இருவரும் ஒன்றாக இருந்த போது பாமக இளைஞர் சங்கத் தலைவராகப் பொறுப்பு வகித்தார். ஆனால் அன்புமணிக்கு இதில் விருப்பம் இல்லாததால், தமிழ் குமரனே அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். பின்பு கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்த போது ராமதாஸ் தலைமையிலான அணியில் இவர் மீண்டும் பாமக இளைஞர் சங்கத் தலைவராக பொறுப்பேற்றார். இவர் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Source link