சிறுபான்மை மக்கள் உள்ளிட்ட அனைத்து சகோதரர்களுக்கும் பாதுகாப்பு வேண்டும். திமுக கூட்டணியில் பெயருக்கு இருக்கும் காங்கிரஸும் சரி, பாஜக கூட்டணியில் நிர்பந்தத்தால் சேர்ந்திருப்பவர்களுக்கும் சரி, ஒருத்தரை ஒருத்தர் விழுங்கி ஏப்பம் விடப்பார்க்கும் இந்த இருகூட்டணியும் உங்களுக்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள். உங்களுக்கு நல்லாட்சி நம்பிக்கையான ஆட்சி வேண்டும் என்றால் தவெகவுக்கு வாக்களியுங்கள்” இவ்வாறு அவர் பேசினார்.
இதனிடையே, புதுச்சேரியில் ரேஷன் கடைகளே இல்லை என கடந்த முறை பேசியதை குறிப்பிட்டு, பேசிய விஜய், நான் தெரியாமல் பேசியதாகவே வைத்துக் கொள்ளுங்கள். புதுச்சேரியில் பொது விநியோகம் முழுமையாக இல்லாதது குறித்த பத்திரிகை செய்திகளுக்கு பதில் என்ன என கேள்வி எழுப்பினார்.
வாக்குறுதிகள்: துணைநிலை ஆளுநரின் தலையீடு இல்லாத முழுமையான மாநில அந்தஸ்தைப் பெற சட்டப்படி 100% முயற்சிப்போம். தவெக ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். ரூ.25 ஆயிரம் மகப்பேறு உதவித் தொகையாக வழங்கப்படும். அனைத்து அரசு காலி பணியிடங்களும் நிரப்பப்படும். 100 சதவிகிதம் பயிர் காப்பீடு தரப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 200 யூனிட் வரை கட்டணம் இல்லா மின்சாரம் வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
