காங்கோ சுரங்கத்தில் நிலச்சரிவு; 200 பேர் பலியான சோகம்

கின்ஷாஷா: காங்கோ நாட்டில் கோல்டான் கனிம சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

கிழக்கு ஆப்ரிக்க நாடான காங்கோவில் ஏராளமான சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள சட்டவிரோத சுரங்கங்களால் அடிக்கடி விபத்துகள் நடப்பதும் வழக்கம். குறிப்பாக ருபாயா நகரில் எம் – 23 கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் கோல்டான் கனிம சுரங்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் தான் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது; நுாற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் மீண்டும் அதே சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. சுரங்கத்திற்கு அருகே பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு, தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், உணவு விற்பனையாளர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என பலர் சிக்கிக் கொண்டனர்.

விபத்தில், 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Source link