காதலித்த போது செலவு செய்த பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரம்- சட்ட கல்லூரி மாணவரை கடத்தி தாக்கிய கும்பலால் பரபரப்பு

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது19). இவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி வேலை பார்த்து கொண்டே மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் சட்டம் படித்து வருகிறார்.

இவருக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த 22வயது கல்லூரி மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஒரு வருடமாக இருவரும் நெருங்கி பழகி காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது சினிமா தியேட்டர், கடற்கரை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களுக்கும் ஜோடியாக காதலர்கள் இருவரும் சுற்றி திரிந்தனர். இதற்கிடையே திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காதலர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் காதலன் சசிகுமாரை விட்டு மாணவி பிரிந்து சென்றுவிட்டார்.

ஆசை காதலி பிரிந்து சென்றதால் அவரை மறக்க முடியாமல் தனிமையில் தவித்து வந்த சசிகுமார் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து மாணவியை பின் தொடர்ந்து சென்று “என்னை விட்டு பிரிந்து சென்ற நீ இதுவரை என்னிடம் வாங்கிய ரொக்கம் மற்றும் நான் உனக்கு செலவு செய்த பணத்தையும் சேர்த்து திருப்பி கொடு” என்று கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார்.

Source link