காத்மாண்டு: நேபாளத்தில் கடந்தாண்டு நடந்த இளந்தலைமுறையினரின் போராட்டத்தின் போது உயிரிழந்த 27 மாணவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நம் அண் டை நாடான நேபாளத்தில் கடந்தாண்டு செப்டம்பரில் இளந்தலைமுறையினர் போராட்டத்தில் குதித்தனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில், 27 மாணவர்கள் உட்பட 76 பேர் கொல்லப்பட்டனர்.
இம்மாதம், 5ம் தேதி நேபாளத்தில் பொதுத் தேர்தல் நடந்தது. இதில், இளந்தலைமுறையினர் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மாணவர் அமைப்பின் கட்சியான தேசிய சுதந்திர கட்சி பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றியது. புதிய பிரதமராக பாலேந்திர ஷா பிரதமராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், ஷா பதவியேற்ற 24 மணி நேரத்தில், 76 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் பிரதமர் சர்மா ஒலி, முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அடுத்த அதிரடியாக, போராட்டத்தின் போது உயிரிழந்த 27 மாணவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி மற்றும் கூடுதல் நிவாரணத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
