காந்தி நகர்: 'லவ் ஜிஹாத்' சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, திருமண பதிவு சட்டத்தில் திருத்தம் செய்ய குஜராத்

காந்தி நகர்: ‘லவ் ஜிஹாத்’ சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, திருமண பதிவு சட்டத்தில் திருத்தம் செய்ய குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, திருமண பதிவுக்கு இனி பெற்றோரின் ஒப்புதல் கட்டாயமாகிறது. குஜராத் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

சட்டசபையில், துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி நேற்று பேசியதாவது:

குஜராத்தில், அப்பாவி பெண்கள் ஏமாற்றப்பட்டு சூழ்ச்சி வலையில் சிக்கிக் கொள்கின்றனர். இத்தகைய செயல்கள், சமூகத்தில் கறையான்கள் போல பரவி வருகின்றன. ‘லவ் ஜிஹாத்’ என்ற பெயரில் நடக்கும் மத மாற்றம், கலாசார ஊடுருவலாக மாறி உள்ளது.

இந்த விவகாரத்தை இனியும் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது.

திருமண பதிவு சட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களை பயன்படுத்தி, சில சமூக விரோத சக்திகள் செயல்படுவதை தடுக்க, பல சமூக அமைப்புகளும், பொதுமக்களும் விதிகளில் மாற்றம் செய்ய வலியுறுத்தி இருந்தனர்.

இதை ஏற்று, திருமண பதிவு சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய அரசு முடிவு செய்துஉள்ளது.

தற்போதைய முறையில் உள்ள குறைபாடுகளை களைந்து, முறைகேடுகளை தடுப்பதே இதன் நோக்கம்.

முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து, பொதுமக்கள் மற்றும் அமைப்புகள், 30 நாட்களுக்குள் தங்களது கருத்துகளையும், ஆட்சேபனைகளையும், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் இணையதளத்தில் தெரிவிக்கலாம்.

இவற்றை பரிசீலித்த பின்னரே புதிய திருத்தங்கள் நடைமுறைக்கு வரும். இவ்வாறு அவர் பேசினார்.

என்னென்ன திருத்தம்?

மணமகன், மணமகள் இருவரும் திருமணத்தை பற்றி பெற்றோருக்கு தெரிவித்து விட்டனரா என்ற உறுதிமொழி பத்திரத்தை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் விண்ணப்பத்தில் மணமக்களின் பெற்றோர் பெயர், முகவரி, ஆதார் எண் போன்ற விபரங்களை குறிப்பிடுவது கட்டாயம் விண்ணப்பத்தை சமர்ப்பித்த, 10 வேலை நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட உதவி பதிவாளர், மண மக்களின் பெற்றோருக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிப்பார் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, அனைத்து விதிகளும் பூர்த்தியாகி இருப்பதை உறுதி செய்த, 30 நாட்களுக்கு பிறகே, திருமணம் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப் படும் இந்த விபரங்கள் அனைத்தும் மா நில அரசு உருவாக்கும் பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

Source link