காமன்வெல்த் கபடி: அரைஇறுதிக்கு முன்னேறிய இந்திய பெண்கள் அணி

ஆமதாபாத்,

முதலாவது காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டி ஆமதாபாத்தில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் 13 அணிகளும், பெண்கள் பிரிவில் 10 அணிகளும் பங்கேற்றுள்ளன. அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதி வருகின் றன. 4-வது நாளான நேற்று நடந்த பெண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில்(ஏ பிரிவு) இந்திய அணி 38-10 என்ற புள்ளி கணக்கில் நைஜீரியாவை தோற்கடித்து தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தது.

ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் (ஏ பிரிவு) இந்திய அணி 50-25 என்ற புள்ளி கணக்கில் நைஜீரியாவை பந் தாடி 4-வது வெற்றியை பதிவு செய்தது. அடுத்த லீக்கில் இன்று தான்சானியாவை சந்திக்கிறது.

Source link