பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசியில் கல்வி திருவிழா நடைபெற்றது. விழாவில் 500க்கும் பெண்கள் பழைய விருதுநகர் சாலையிலுள்ள காமராஜர் வாசக சாலையிலிருந்து ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று பின்னர் காமராஜர் சிலைக்கு பாலபிஷேகம் செய்தனர்.
ஊர்வலத்தின் போது கேரளா செண்டை மேளம் முழங்க சிலம்பாட்டம் ஆடியபடியும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கால்களில் சலங்கை கட்டி பாரம்பரியமிக்க பெருஞ்சலங்கை நடனமாடியது காண்போரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. தொடர்ந்து தீ சாகசமும் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு ராட்சத மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
