நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெட்டைகுளம் பகுதியிலிருந்து ஆற்றங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையின் ஓரத்தில் சொகுசு கார் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாகவும், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் உள்ளூர் மக்கள் நேற்று போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திசையன்விளை போலீசார் மற்றும் வள்ளியூர் டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் காரை ஆய்வு செய்தனர்.
அடுத்தடுத்து நடைபெற்ற விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியது. உயிரிழந்தவர்கள் சென்னை நந்தம்பாக்கத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தினர் என்பதும், கடன் பிரச்சனையால் தத்தளித்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. சம்பவத்தன்று ஆற்றங்கரை பள்ளிவாசலில் வழிபாடு நடத்திச் சென்றதும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் உறுதியாகி உள்ளது.
கடன் தொல்லையால் நிகழ்ந்த திட்டமிட்ட தற்கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். தற்போது நான்கு பேரின் உடல்களும் நஸ்ரின் பாத்திமாவின் சொந்த ஊரான ஆழ்வார் திருநகருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
