சென்னை: காரைக்குடியில் போட்டியிடும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெற்றிக்கு ஜாதி ஓட்டுகளை பெற, அவரது கட்சியினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நா.த.க., நிர்வாகிகள் கூறியதாவது: சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில், முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் 25 முதல் 30 சதவீதம்; தேவேந்திர குல வேளாளர் ஓட்டுகள் 12 முதல் 14 சதவீதம்; நகரத்தார் ஓட்டுகள் 12 சதவீதம்; யாதவர் மற்றும் சிறுபான்மையினர் ஓட்டுகள் 10 சதவீதம் உள்ளன.
அங்கு, பெரும்பான்மையாக இருக்கும் முக்குலத்தோர் ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும். உதாரணமாக, கடந்த 2021ல் அ.ம.மு.க., அங்கு, 21 சதவீதம் ஓட்டுகளை பெற்றது.
அதேபோல், தேவேந்திர குல வே ளாளர், நகரத்தார், சிறுபான்மையினர் சமூகத்தினர் ஓட்டுகளும் வெற்றி வாய் ப்பை உறுதி செய்பவையாக உள்ளன. எனினும் சீமானை எந்த ஜாதிக்குள்ளும் அடைக்க முடியாது என்பது, நா.த.க.,விற்கு பலம்.
முக்குலத்தோர், தேவேந்திர குல வேளாளர், நகரத்தார் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரின் பிரச்னைகளுக்கும் சீமான் ஆதரவாக இருந்ததை சுட்டி க்காட்டி, பிரசாரம் செய்வதால், அனைத்து சமூக ஓட்டுகளும் கணிசமாக சீமானுக்கு கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
