காரைக்குடி: இந்த தேர்தல் பிடித்த தலைவர்களுக்கு ஓட்டு போடும் தேர்தல் இல்லை. ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் என

காரைக்குடி: இந்த தேர்தல் பிடித்த தலைவர்களுக்கு ஓட்டு போடும் தேர்தல் இல்லை. ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை பேசியதாவது: காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரமும் அவரது மகனும் எம்-.பி.,யுமான கார்த்தி இருவரும், காரைக்குடி தொகுதியை மொத்தமாக பிடித்து வைத்து உள்ளனர்.

மாங்குடி எம்.எல்.ஏ., என சொல்வதை விட, சிதம்பரம் குடும்பத்தின் பி.ஏ., என்று சொல்லலாம். வேட்பாளர்களுக்கு காரைக்குடி சாப்பாடு போட்டு அனுப்புங்கள் என கார்த்தி எம்.பி., சொல்கிறார். நீங்கள் ஒழுங்காக வேலை செய்திருந்தால் எதற்காக மற்றவர்கள் வந்து, இங்கு போட்டி போடப்போகிறார்கள்.

காங்., கட்சியால் எந்த பயனும் இல்லை, மக்களும் அந்த கட்சியை விரும்பவில்லை, கடலில் கரைத்த பெருங்காயமாகி விட்டது, காங்கிரஸ். தமிழகத்தில் பிரசாரத்திற்காக, ராகுல் வந்ததே இல்லை.

இந்த தேர்தல் பிடித்த தலைவர்களுக்கு ஓட்டு போடும் தேர்தல் இல்லை. ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல். காலம் வரும்போது அவர்களுக்கு ஓட்டு போடலாம். இப்போது, தி.மு.க., ஆட்சி வெளியேற வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்

Source link