கார்டூம்: சூடானில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 64 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு

கார்டூம்: சூடானில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 64 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

வட ஆப்ரிக்க நாடான சூடானில் அதிகாரப் போட்டி காரணமாக ராணுவத்துக்கும், ஆர்எஸ்எப் படைக்கும் இடையே 2023 ம் ஆண்டு முதல் மோதல் இருந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில், சூடானின் கிழக்கு தர்புர் மாகாணத்தில் உள்ள எல் தயீன் என்ற நகரில் செயல்படும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் நடந்த இத்தாக்குதலில் 13 குழந்தைகள், 2 நர்சுகள் மற்றும் டாக்டர் உள்ளிட்ட 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ராணுவம் ஏவிய டிரோன் இந்த மருத்துவமனையை தாக்கியதாக ஆர்எஸ்எப் அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், சூடான் ராணுவம் இந்த தாக்குதலில் தங்களுக்கு தொடர்பில்லை எனக்கூறியுள்ளது.

சூடானில் இதுவரை நடந்த தாக்குதல்களில் 2,036 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் 231 தாக்குதல்கள் சுகாதார கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்டதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அத்னம் கூறியுள்ளார். சூடானில் மோதலை நிறுத்திவிட்டு, அப்பாவி மக்கள், சுகாதார பணியாளர்களை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Source link