கார் மோதி தொழிலாளி பலி

வானுார்: மொபட் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.

புதுச்சேரி, கொட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் செல்வநாதன், 53; சென்ட்ரிங் தொழிலாளி. இவர் நேற்று காலை புதுச்சேரி அருகே உள்ள, நாவற்குளம் பகுதிக்கு ஸ்கூட்டி மொபட்டில் சென்றார்.

பின் வீட்டிற்கு செல்வதற்காக, பட்டானுார் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டர் பகுதியில் இருந்து புதுச்சேரி-திண்டிவனம் பைபாஸ் சாலை சந்திப்பில் வந்து திரும்புவதற்காக நின்றார். அப்போது, திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற கார், மொபட் மீது வேகமாக மோதியதில் துாக்கி வீசப்பட்ட செல்வநாதன் பலத்த காயமடைந்தார்.

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக, ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link