கார் வாங்குவது 'காஸ்ட்லி'யாகிறது ஏப்., முதல் 2 சதவீதம் விலை உயர்வு

புதுடில்லி: புதிய கார்களின் விலை வரும் 1ம் தேதி முதல் இரண்டு சதவீதம் உயர உள்ளது. சிறிய ரக கார்கள் முதல் நடுத்தர ரக கார்கள் வரை அனைத்து பிரிவுகளிலும் விலை உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்பட ு கிறது.

‘மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, பி.எம்.டபுள்யு’ போன்ற சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களும், 2 சதவீதம் வரை விலையை உயர்த்த உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளன. டாடா நிறுவனம் ஏப்., 1ம் தேதி முதல் விலை உயர்த்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வாகனங்களின் அடிப்படை விலை உயர்வதோடு மட்டுமல்லாமல், தற்போது நிறுவனங்கள் வழங்கி வரும் தள்ளுபடி மற்றும் விற்பனை சலுகைகள் ஏப்., மாதத்திற்கு பின் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், வாடிக்கையாளர்களுக்கு வாகனத்தின் விலை மேலும் அதிகரிக்கும்.

எனவே, புதிய வாகனங்கள் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள், ஏப்., மாதத்திற்கு முன்பே வாங்குவது, பணத்தை மிச்சப்படுத்தும்.

விலை உயர காரணங்கள்

 இரும்பு, அலுமினியம் போன்ற மூலப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிப்பு

 வாகனங்களின் புகை கட்டுப்பாட்டு கருவிகளில் பயன்படுத்தப்படும் ரோடியம், பல்லேடியம் விலை உயர்வு

 சரக்கு போக்குவரத்து செலவு அதிகரிப்பு

 ரூபாய் மதிப்பு சரிவால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் உதிரிபாகங்கள், மின்னணு பொருட்களின் செலவு அதிகரிப்பு.

Source link