காலிறுதியில் ஆயுஷ் ஷெட்டி: ஆசிய பாட்மின்டனில் முன்னேற்றம்

நிங்போ: ஆசிய பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி முன்னேறினார்.

சீனாவின் நிங்போ நகரில், ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில், உலகின் ‘நம்பர்-25’ இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, 20வது இடத்தில் உள்ள சீனதைபேயின் சி யூ ஜென் மோதினர். இதில் ஆயுஷ் 21-16, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். காலிறுதியில் ஆயுஷ், இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டியை சந்திக்கிறார்.

மற்றொரு 2வது சுற்று போட்டியில் இந்தியாவின் பிரனாய் 12-21, 19-21 என, ஹாங்காங்கின் வெங் ஹாங் யாங்கிடம் தோல்வியடைந்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சிந்து, சீனாவின் வாங் ஜி யி மோதினர். இதில் சிந்து 18-21, 8-21 என அதிர்ச்சி தோல்வியடைந்தார். மற்றொரு 2வது சுற்றில் இந்தியாவின் உன்னாதி ஹூடா 17-21, 9-21 என ஜப்பானின் டொமோகா மியாஜாகியிடம் வீழ்ந்தார்.

கலப்பு இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 13-21, 14-21 என மலேசியாவின் சென் டாங் ஜீ, தோ ஈ வெய் ஜோடியிடம் தோற்றது.

Source link