இந்தியன் வெல்ஸ்: இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் காலிறுதிக்கு இந்தியாவின் யூகி பாம்ப்ரி, சுவீடனின் கோரன்சன் ஜோடி முன்னேறியது.
அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில், பரிபாஸ் ஓபன் ஏ.டி.பி., மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு ‘ரவுண்டு-16’ போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, சுவீடனின் கோரன்சன் ஜோடி, நெதர்லாந்தின் சான்டர் அரெண்ட்ஸ், செக்குடியரசின் ஜிரி லெஹெக்கா ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றிய இந்தியா-சுவீடன் ஜோடி, இரண்டாவது செட்டையும் 6-4 என தன்வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 14 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய பாம்ப்ரி, கோரன்சன் ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.
