சென்னை மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடபெரும்பா க்கம் பகுதியில் இன்று காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை நீடித்த மின் தடையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்கி வரும் இப் பகுதியில், நீண்ட நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
தொழிற்சாலைகளின் உற்பத்திப் பணிகளும் முடங்கியதால் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டனர். பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் மின்விநியோகம் சீராகாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும் மின்வாரிய அதிகாரிகளும் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட நேர மின்தடைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் போராட்டம் நடத்திய பொது மக்களிடம் காவல்துறை சமரச பேச்சுவார்த்தை பின் கலைந்து சென்றனர்.
