மாலி: தெற்காசிய கால்பந்து (20 வயதுக்கு உட்பட்டோருக்கான) ஆண்களுக்கான தொடர் மாலத்தீவில் நடக்கிறது. இந்தியா, வங்கதேசம் உட்பட 7 அணிகள் இரு பிரிவுகளாக மோதுகின்றன. நேற்று மாலியில் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
இந்தியா சார்பில் விஷால் யாதவ், 4வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். போட்டியின் 63வது நிமிடம் ஓமங் டோடும், தலையால் முட்டி ஒரு கோல் அடித்தார். 87 வது நிமிடம் இந்திய அணிக்கு ‘பெனால்டி’ வாய்ப்பு கிடைத்தது. இதை வீணாக்காமல், கோலாக மாற்றினார் ஓமங் டோடும்.
முடிவில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ‘பி’ பிரிவில் முதல் இரு இடத்தை உறுதி செய்த வங்கதேசம், இந்திய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
