கால்பந்து: இந்தியா ஏமாற்றம்

பதும் தானி: ஆசிய கோப்பை கால்பந்தில் (20 வயது) இந்திய பெண்கள் அணி, முதல் போட்டியில் 0-6 என ஜப்பானிடம் தோல்வியடைந்தது.

தாய்லாந்தில் பெண்களுக்கான (20 வயதுக்கு உட்பட்ட) ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 12வது சீசன், நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

20 ஆண்டுகளுக்கு பின் இத்தொடரில் பங்கேற்க இந்திய அணி தகுதி பெற்றது. ‘குரூப் ஆப் டெத்’ என்றழைக்கப்படும் ‘சி’ பிரிவில், 6 முறை சாம்பியன், ஆசியாவின் ‘நம்பர்-1’ அணி, நடப்பு சாம்பியன் ஜப்பான், வலிமையான ஆஸ்திரேலியா, சீன தைபே அணியுடன் இடம் பெற்றுள்ளது.

நேற்று தனது முதல் போட்டியில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது. 12வது நிமிடத்தில் இந்தியாவின் தோய்பிசனா சானு, ‘சேம்சைடு’ கோல் அடித்தார். அடுத்து ஜப்பானின் மிகி கிமுரா (54), புகுஷிமா (57), நட்சுமி (75), மட்சுனகா (81), யுரா ஹோண்டா (87) என அடுத்தடுத்து கோல் அடித்தனர். இந்திய அணி 0-6 என தோல்வியடைந்தது.

Source link