கால்பந்து: ஒடிசா 'டிரா'

புவனேஸ்வர்: ஒடிசா, இன்டர் காசி அணிகள் மோதிய ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 12வது சீசன் தற்போது நடக்கிறது. நேற்று, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் ஒடிசா, இன்டர் காசி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

போட்டி துவங்கிய முதல் நிமிடத்தில் இன்டர் காசி வீரர் டோம்பா அடித்த பந்து, கோல் போஸ்ட் மேலாகச் சென்றது. 18 வது நிமிடம் முரட்டு ஆட்டத்திற்காக, இன்டர் காசி வீரர் நிஷ்சால், ‘எல்லோ கார்டு’ பெற்றார். 33வது நிமிடம் ஒடிசா வீரர் ரஹிமிற்கு ‘எல்லோ கார்டு’ கிடைத்தது. முதல் பாதியில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை.

தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் இரு அணியினர் போராடிய போதும், ஒரு கோல் கூட அடிக்கப்படவில்லை. முடிவில் கோல் எதுவுமின்றி போட்டி ‘டிரா’ ஆனது.

Source link