காவிரி நீர் பிரச்சினையில் முதல்-அமைச்சர் விஜய் என்னை சந்தித்து பேச விருப்பம்: டி.கே.சிவக்குமார்

புதுடெல்லி,

டெல்லியில் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நான் சமீபத்தில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினேன். அப்போது இந்த ஆண்டு நாட்டில் வறட்சி ஏற்படும் நிலை இருப்பதாக அவர் கூறினார். கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு உங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன். மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. இதற்கு அனுமதி பெற்றுத்தர நீங்கள் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

கிருஷ்ணா, தென்பெண்ணை, காவிரி, கோதாவரி நதிகள் இணைப்புக்கு நாங்கள் (கர்நாடகம்) ஒப்புக் கொண்டுள்ளோம். காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் விஜய் என்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார். மேகதாது திட்ட விஷயத்தில் தமிழகம், கர்நாடகம் பயன்பெறும் வகையில் தீர்ப்பு வழங்கியுள்ளன.

கர்நாடக மண்ணில் மேகதாது அணை கட்ட வேறு மாநிலத்தின் அனுமதி தேவை இல்லை. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் உரிமையும் தமிழ்நாட்டுக்கு இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக கூறியுள்ளது. மாநிலங்களவையில் அன்புமணி ராமதாஸ் எம்.பி கேட்ட கேள்விக்கு மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவை இல்லை என்று மத்திய மந்திரி கூறியுள்ளார். இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Source link