காஷ்மீர் என்கவுன்டர் நீதி விசாரணைக்கு உத்தரவு

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் காந்தர்பால் மாவட்டத்தின் அர்ஹாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது. அங்கு, பாதுகாப்பு படையினர் கடந்த 1ம் தேதி சோதனை நடத்தினர்.

அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த ரஷீத் அகமது முகல் என்ற இளைஞரை பயங்கரவாதி என கருதி, பாதுகாப்பு படையினர் சுட்டனர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

ஆனால், உயிரிழந்த நபர், பயங்கரவாத குழுக்களுடன் எந்த தொடர்பும் இல்லாதவர் எனவும், பாதுகாப்பு படையினர் அவரை வேண்டுமென்றே சுட்டுக் கொன்றதாகம் ரஷீத்தின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.

இந்த தாக்குதலுக்கு, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் முதல்வருமான ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக ஜம்மு – காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, முழுமையான மற்றும் பாரபட்சமற்ற நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Source link