காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

காஸ் சிலிண்டர் விவகாரத்தில், மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் போராட்டங்களில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

வெளியுறவுக் கொள்கையிலும் FailureModel எனப் பெயரெடுத்துள்ள மத்திய பாஜ அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொலைநோக்கு இல்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லை. பொதுமக்களுக்குத்தான் இவர்களால் தொல்லை.

இதனைக் கண்டித்து, தமிழகம் எங்கும் நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். களத்தில் தகிக்கும் மக்களின் கோபத்தை உணர்ந்து, மத்திய அரசு உடனடியாக நிலைமையைச் சீர்செய்திட முன்வர வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

நிறையட்டும்

குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் கொண்ட அரசின் இணையப் பக்கம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகம் தமிழ்ப் பெயர்களால் நிறையட்டும். நான் நடத்தி வைக்கும் ஒவ்வொரு திருமணத்திலும், ‘பிறக்கின்ற குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களைச் சூட்டுங்கள்’ என மணமக்களிடம் கோரிக்கை வைப்பேன்.

அதற்கான பெயர்களையும் அவற்றின் பொருளோடு சேர்த்து உங்களுக்கு இப்போது வழங்கியிருக்கிறோம். தொடர்ந்து புதிய பெயர்களைப் பதிவேற்றுவோம். நீங்களும் பரிந்துரைத்துப் பங்களிக்கலாம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

5 லட்சம் வீடுகள்

மற்றொரு பதிவில் முதல்வர் ஸ்டாலின், ” மூன்று லட்சம் கருணாநிதி கனவு இல்லங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறோம். திராவிட மாடல் 2.0-வில் ஐந்து லட்சம் வீடுகள் இலக்கு” என குறிப்பிட்டுள்ளார்.

Source link