காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் காலை உணவு திட்டம் நிறுத்தமா? அமைச்சர் மகேஷ் பதில்

திருச்சி: ”காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இருந்தாலும், காலை உணவு திட்டம் தடையின்றி நடக்கும்,” என, பள்ளி கல்வித்துறை -அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.

திருச்சியில் நேற்று அவர் கூறியதாவது: காஸ் தட்டுப்பாடு இருந்தாலும், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டமோ, சத்துணவு திட்டமோ எந்த இடத்திலும் நிறுத்தப்படவில்லை.

தமிழக அரசு, இதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்துள்ளது. முதல்வரின் வழிகாட்டுதல்படி, இத்திட்டங்கள் தடையின்றி தொட ரும். தமிழக உரிமைகள் பறிக்கப்படும் போது, களத்தில் நிற்பது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தான். மத்திய அரசு செய்யும் தவறுகளை, த.வெ.க., தலைவர் விஜய் எ திர்த்துப் பேசுவதில்லை.

அ வர் மவுனமாக இருப்பதை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர். தற்போதைக்கு பெட்ரோல், டீசல் விலை உயருவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், தட்டுப்பாடு ஏற்பட்டால் விலை உயரும் அபாயம் உள்ளது. எனவே, மத்திய அரசு முன்கூட்டியே உரிய நடவடிக்கை எடு க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link