'கிராண்ட் டிராவல் மேளா'வில் அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு; வெளிநாட்டு பயணத்தை இனிதே திட்டமிட்ட மக்கள்

கோவை: ‘தினமலர்’ நாளிதழ் மற்றும் ‘தாமஸ் குக்’ டிராவல் ஏஜன்ஸி சார்பில், ‘கிராண்ட் டிராவல் மேளா’ கோவை அவிநாசி ரோட்டில் உள்ள கிராண்ட் ரீஜன்ட் ஹோட்டலில் நேற்று நடந்தது.

சர்வதேச மற்றும் உள்நாட்டில் சுற்றுலா செல்ல திட்டமிட்டவர்கள், சிறப்பு சலுகையில், சுற்றுலா செல்ல இந்த மேளா நடத்தப்பட்டது. நேற்று காலை 10:00 மணிக்கு துவங்கிய மேளாவுக்கு ‘தினமலர்’ நாளிதழ் வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்தனர். ஒரு நாள் மட்டுமே சலுகை என்பதால், பலரும் தங்களது சுற்றுலாவுக்கான முன்பதிவை மேற்கொண்டனர். பயணத் தேதியை மாற்ற, ரத்து செய்ய கட்டணம் இல்லை, கூடுதல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன.

Image 1539780மேளாவில் பங்கேற்ற பலரும், பயண தேதிகள், விசா நடைமுறைகள், இன்சூரன்ஸ், பாதுகாப்பு, இந்திய உணவு கிடைக்கும் தன்மை, வழங்கப்படும் வசதிகள், கட்டண சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தாமஸ் குக் பிரதிநிதிகளுடன் விரிவாக ஆலோசித்தனர். ‘யூரோப் ஹாலிடேஸ்’ பிரிவில், ‘சுவிஸ் பிரெஞ்ச் மேஜிக்’ ‘பியூஷன் ‘யூரோப் – சவுத் மற்றும் கிராண்ட் பார்கெயின் டூர் ஆப் யூரோப்’ என, மூன்று பிரிவுகள் இடம் பெற்றிருந்தன.

பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஜெர்மன், பெல்ஜியம், ஆஸ்திரியா, லீச்சென்ஸ்டீன் உள்ளிட்ட நாடுகளுக்கான சுற்றுலா சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன. எட்டு முதல், 15 நாட்கள் வரையிலான திட்டங்கள், ரூ.2.77 லட்சம் முதல் ரூ.4.61 லட்சம் வரையிலான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

குயிக் ஹாலிடேஸ் பிரிவில் துபாய், அபுதாபி, சிங்கப்பூர், மலேசியா, சீனா என, தேர்வு செய்யும் நாடு மற்றும் நாட்களை பொறுத்து, ரூ.1.11 லட்சம் முதல் ரூ.1.82 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. சிங்கப்பூர் சுற்றுலா முன்பதிவுக்கு, சொகுசு கப்பல் பயணம் இலவசம், ஒரு நாள் தங்குமிடம் இலவசம் ஆகிய சலுகைகள் வழங்கப்பட்டன. அனுபவமிக்க சுற்றுலா, ஆன்மிக பயணங்கள், இந்தியா மற்றும் அதை சுற்றிலும் ஆகிய திட்டங்கள், ரூ.30 ஆயிரம் முதல், ரூ.3.97 லட்சம் வரையிலான கட்டணத்தில் வழங்கப்பட்டன.

உள்நாட்டு சுற்றுலாவில் ஹிமாச்சல், நேபாளம், கைலாஷ், கேரளா, காஷ்மீர், லடாக் உள்ளிட்ட இடங் களுக்கு செல்ல முன்பதிவு நடந்தது. இப்பிரிவில் முன்பதிவு செய்தவருடன் ஒரு நபர் இலவசமாக பயணிக்கும் சலுகையும் வழங்கப்பட்டது. முன்பதிவு செய்தோரில் பம்பர் குலுக்கல் முறையில் தேர்வான ஜோடிக்கு மூன்று நாள் கோவா பயணம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டன.Image 1539782

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி கிரெடிட் கார்டு வாயிலாக கட்டணம் செலுத்தியவர்களுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது. ‘தினமலர்’ நாளிதழ் வாசகர்களுக்கு ரூ.30 ஆயிரம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டது. அமெரிக்க டூரிஸ்டர் பேக் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் போது பார்வையாளர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. தாமஸ் குக் டிராவல் ஏஜன்ஸி கோவை கிளை மேலாளர், உத்ரா மதன் முன்பதிவு செய்தவர்களுக்கு பயண அனுமதி அட்டையை வழங்கினார். மாலை 6:00 மணி வரை நடந்த மேளாவில், 204 பேர் பங்கேற்றனர்.

Image 1539783

அதிக நம்பிக்கை

பி.ஸ்ரீபதி, கோவை: குடும்பத்துடன் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளோம். இங்கு கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.நேரில் வந்து பார்க்கும் போது அதிக நம்பிக்கை ஏற்படுகிறது.

தெளிவான விளக்கம்

ஆர்.நிர்மலா, விளாங்குறிச்சி ரோடு: இங்கு வந்தது பேக்கேஜ்களுக்கு என்ன சலுகை வழங்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள வந்தோம். அவர்களின் விளக்கத்தை கேட்டு தற்போது சுற்றுலா வுக்கு முன்பதிவு செய்துள்ளோம். நமது பாதுகாப்பு குறித்த சில சந்தேகங்கள் இங்கு வந்த பின்னரே தெளிவாகியுள்ளது.

எங்கள் பயணத்திட்டம்

ஆர்.செல்வராஜ், இடையர்பாளையம்: தாமஸ் குக் மிகப்பெரிய நிறுவனம். ‘தினமலர்’ உடன் சேர்ந்து நடத்துகின்றனர். அதனால், சலுகைகள் இருக்கும் என எதிர்பார்த்தோம். அது இங்கு வந்ததும் பூர்த்தியாகி உள்ளது. அதன் அடிப்படையில் எங்கள் பயணத்திட்டத்தை மேற்கொள்ள உள்ளோம்.

முழுமையாக கிடைக்காது

ஆர்.ஜெகதீஸ்வரி, இடையர்பாளையம்: ஒரு குறிப்பிட்ட பகுதி குறித்து கேட்கும் போது, ஆன்லைனில் சில தகவல்கள் முழுமையாக கிடைக்காது. மேலும், சில கட்டணங்கள் மறைந்திருக்கும். நேரில் வரும் போது, அந்த கட்டணங்கள் குறித்து தெரியவரும். அதை இங்கு விளக்கமாக தெரிவிக்கின்றனர். எங்களது அனைத்து சந்தேகங்களும் தீர்க்கப்பட்டன. குறிப்பாக இந்திய உணவு, தங்குமிடம், பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வழங்குகின்றனர்.

Source link