கிரீன்லாந்தை கையகப்படுத்தும் முயற்சியில் மீண்டும் இறங்கினார் அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: ஈரான் போரின்போது அமெரிக்காவிற்கு ஆதரவளிக்கத் தவறியதற்காக நேட்டோவை டிரம்ப் விமர்சித்தார். மேலும், கிரீன்லாந்தை கையகப்படுத்தும் தனது முயற்சியை அவர் மீண்டும் முன்னெடுத்தார்.

ஈரான் மீதான போரில் அமெரிக்காவிற்குப் போதிய ஆதரவு அளிக்காததால், நேட்டோ (NATO) நாடுகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார். நட்பு நாடுகள் நியாயமற்ற முறையில் நடந்துகொள்வதாகவும், நேட்டோவில் இருந்து விலகுவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். தற்போது நேட்டோ அமைப்பை கடுமையாக விமர்சித்த அதிபர் டிரம்ப், கிரீன்லாந்தை கையகப்படுத்தும் முயற்சியில் மீண்டும் இறங்கினார்.

இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நமக்குத் தேவைப்பட்டபோது நேட்டோ அமைப்பு ஆதரவு அளிக்கவில்லை. மீண்டும் தேவைப்பட்டாலும் அவர்கள் ஆதரவாக இருக்க மாட்டார்கள். கிரீன்லாந்தை நினைவில் கொள்ளுங்கள். பனி படர்ந்த அந்த நாடு, மோசமாக நிர்வகிக்கப்படுகிறது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Source link