கிருஷ்ணகிரி: அரசு பள்ளி கொடிக்கம்பத்தில் பறந்த, அ.தி.மு.க., கொடியால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கிருஷ்ணகிரி: அரசு பள்ளி கொடிக்கம்பத்தில் பறந்த, அ.தி.மு.க., கொடியால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் கோவிந்தராசன், மருதேப்பள்ளி சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று வேன் பிரசாரம் மேற்கொண்டார். அவரை வரவேற்க அந்தந்த பகுதிகளில், அ.தி.மு.க., கொடிக்கம்பங்கள் கட்டப்பட்டன.

அதன்படி, மருதேப்பள்ளியிலும், அ.தி.மு.க., கொடிக்கம்பங்கள் கட்டப்பட்டன. அப்போது, சாலையை ஒட்டிய அரசு நடுநிலைப்பள்ளியில், தேசியக்கொடி ஏற்ற அமைக்கப்பட்ட கொடி கம்பத்திலும், அ.தி.மு.க., கொடி பறந்துள்ளது.

இதை, அவ்வழியாக சென்ற பொதுமக்கள், தி.மு.க.,வினர் பார்த்து அதிர்ச்சியடைந்து, போலீசார், தேர்தல் அலுவலர்களிடம் புகார் அளித்தனர். கந்திகுப்பம் போலீசார் விசாரித்தனர்.

அதில், பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுவர்கள், விடுமுறை நாளான நேற்று விளையாட்டாக, அ.தி.மு.க., கொடியை எடுத்து, பள்ளி கம்பத்தில் கட்டியது தெரிந்தது.

Source link