கிருஷ்ணகிரி: முதியவரைக் கொன்று மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்; 7 தனிப்படைகள் அமைத்து போலீஸ்

75 வயது முதியவரைக் கொடூரமாகக் கொலை செய்து மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த கொலைகாரனை கிருஷ்ணகிரி எஸ்.பி தலைமையில் 7 தனிப்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Murder

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மூன்றம்பட்டி ஊராட்சிப் பகுதியில் 75 வயதான கண்ணப்பன் மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த 8 ஆம் தேதி இரவு வீட்டுக்கு வெளியே கட்டிலில் படுத்திருந்த கண்ணப்பனை அங்கு வந்த மர்ம நபர் கல்லால் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

அவர் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் படுத்திருந்த மனைவி பதறி அடித்து வெளியில் வந்தபோது கணவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில், அந்த நபர் மூதாட்டியைத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் வருவதை அறிந்து அந்த நபர் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். அதன் பின்பு அங்கு வந்த மக்கள் இருவரையும் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கண்ணப்பன் உயிரிழந்தார். காயமடைந்த மூதாட்டிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எஸ்.பி. தங்கதுரை
எஸ்.பி. தங்கதுரை

ஊத்தங்கரை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தை சிங்காரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் கிருஷ்ணகிரி எஸ்.பி. தங்கத்துரை சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

கொலைகாரன் நிர்வாணமாக வந்ததாகச் சொல்லப்படும் நிலையில் அருகிலுள்ள வனப்பகுதிக்குள் பதுங்கியிருக்கலாம் என்பதால் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலைகாரனைத் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

Source link