ஏ ப்ரல் 1ம் தேதி முதல் ‘ஆக்சிஸ் பேங்க், எஸ் பேங்க் மற்றும் எஸ்.பி.ஐ., கார்டு’ ஆகிய முக்கிய வங்கிகள் தங்களது ‘கிரெடிட் கார்டு’ சலுகைகள் மற்றும் கட்டண விதிமுறைகளை மாற்றி அமைக்கவிருக்கின்றன.
‘ஏர்போர்ட் லவுஞ்ச்’ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், அதிக சலுகைகள் வழங்குவது வங்கிகளுக்கான செலவை அதிகரிப்பதாலும், கிரெடிட் கார்டுகளில் அதிக செலவுகளை செய்பவர்களுக்கு மட்டும் அதிக சலுகைகளை வழங்க வங்கிகள் திட்டமிடுகின்றன.
எஸ்.பி.ஐ., கார்டு
ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 60,000 ரிவார்டு புள்ளிகளை மட்டுமே பணமாகவோ அல்லது வவுச்சர்களாகவோ மாற்ற முடியும். ‘ஏர் இந்தியா எஸ்.பி.ஐ., சிக்னேச்சர்’ மற்றும் ‘போன்பே எஸ்.பி.ஐ.,’ போன்ற பிரீமியம் கார்டுகளுக்கு இது பொருந்தாது.
ரிவார்டு புள்ளிகளை இனி 4,000 புள்ளிகளின் மடங்குகளில் மட்டுமே மாற்ற முடியும்
ஆன்லைன் மற்றும் ஆப்லைன் செலவுகளுக்கான மாதாந்திர ‘கேஷ்பேக்’ வரம்பு 5,000 ரூபாயிலிருந்து 4,000 ரூபாயாக குறைக்கப்படுகிறது.
ஆக்சிஸ் பேங்க்
* ‘ஏர்டெல் ஆக்சிஸ் கார்டு’ ஏர்டெல் பில்களுக்கான 25 சதவீதம் ‘கேஷ்பேக் மற்றும் யுட்டிலிட்டி’ பில்களுக்கான 10 சதவீதம் ‘கேஷ்பேக்’ இனி செலவு செய்யும் அளவை பொறுத்துதான் கிடைக்கும்
* இந்த கார்டில் வழங்கப்பட்ட 4 இலவச ‘ஏர்போர்ட் லவுஞ்ச்’ வசதிகள் முற்றிலும் நீக்கப்படுகின்றன
* ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த ‘ஸ்விகி மற்றும் பிக்பேஸ்கட்’ சலுகையான 10 சதவீதம் ‘கேஷ்பேக்’ நிறுத்தப்படுகிறது.
எஸ் பேங்க்
* இதற்கு முன் 15,000 ரூபாய்க்கு மேல், மின்சாரம், தொலைபேசி போன்ற பில்களை ‘எஸ் பேங்க்’ சாதாரண கிரெடிட் கார்டுகள் மூலம் கட்டினால் 1 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இனி இந்த வரம்பு 25,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
* ‘பேடிஎம், போன்பே அல்லது அமேசான்பே’ போன்ற வாலட்களில் கிரெடிட் கார்டு வாயிலாக பணம் ஏற்றுபவர்கள், ஒரு மாதத்தில் 2,000 ரூபாய் வரை வாலட்டில் பணம் ஏற்றினால் எந்தவித கூடுதல் கட்டணமும் கிடையாது. 2,000 ரூபாயை தாண்டினால், மொத்த தொகையில் 1 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும்.
