நடிகர் ரியோ கடைசியாக ‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ‘ராம் இன் லீலா’ எனும் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே ‘ரிவர் ரூட் ஸ்டூடியோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இரண்டு படங்களை தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் ரியோ நடிக்கும் புதுப்படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ‘மேடி’ எனும் தலைப்பில் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிக்கிறார். சானியா ஐயப்பன் நாயகியாக நடிக்க ஆர்ஜே விஜய், அஜு வர்கீஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். திபு நினன் தாமஸ் இசையமைக்கும் இப்படத்தை கலையரசு தயாரிக்கிறார். இவர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளராக பணியாற்றி வருகிறார். இப்போது ரோல் டைம் ஸ்டூடியோஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கு அதன் முதல் படமாக இப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. பூஜை விழாவில் சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ், சிபி சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பை கிளாப் போர்ட் அடித்து துவங்கி வைத்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
