கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடை

சென்னை: கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடை அமலில் இருக்கும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 – ன் கீழ் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 15 தேதி முதல் ஜீன் 14 வரை மீன்பிடி தடைக் காலம் 61 நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மீன்பிடி தடைக் காலத்தில் தமிழக கடலோர பகுதிகளிலுள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவலைப் படகுகள் மீன்பிடி துறைமுகம் / தங்குதளத்திலிருந்து கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

Source link