கீழடி: கீழடி, 11ம் கட்ட அகழாய்வில் இரு அடுக்குகள் கொண்ட செங்கல் கட்டுமானம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை

கீழடி: கீழடி, 11ம் கட்ட அகழாய்வில் இரு அடுக்குகள் கொண்ட செங்கல் கட்டுமானம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், கீழடியில், 11ம் கட்ட அகழாய்வு பணி, மார்ச், 18, முதல் நடந்து வருகிறது. கீழடியில் மத்திய தொல்லியல் துறையின் இரண்டாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமானத்தின் தொடர்ச்சியை கண்டறியும் பொருட்டு, இது நடக்கிறது.

கஜேந்திரன் என்பவரது, 1.5 ஏக்கர் நிலத்தில் எட்டு குழிகள் தோண்ட திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக எதிரெதிரே உள்ள இரு குழிகள் தோண்டும் பணிகள் நடக்கின்றன.

ஒரு குழியில், 2.5 அடி ஆழத்தில், ஒரே இடத்தில், குவியலாக ஐந்திற்கும் மேற்பட்ட சுடுமண் கிண்ணங்கள் கண்டறியப்பட்டன.

இது தவிர, கிண்ணங்களின் அருகில் சிறிய அளவிலான சுடுமண் பானைகளின் ஒரு பகுதியும் வெளிப்பட்டது.

மற்றொரு குழியில், 3 அடி ஆழத்தில் இரு அடுக்குகள் கொண்ட செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டது.

செங்கல் கட்டுமானத்தில், ஒரே அளவிலான செங்கற்கள் இன்றி, வேறு வேறு வடிவங்களுடன் கட்டப்பட்டுள்ளது. செங்கல் கட்டுமானத்தின் அருகிலேயே துளையுடன் கூடிய கூரை ஓடும் கிடைத்துள்ளது.

இந்தப் பணிகளில், கீழடி அகழாய்வு தள தொல்லியல் துறை இயக்குநர் ரமேஷ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Source link