குடியரசு தலைவர் ஆட்சி.. மேற்கு வங்க நிர்வாகம் என் கையில் இல்லை.. – மம்தா

தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், தலைமை இயக்குநர், காவல் ஆணையர், மாவட்ட நீதிபதிகள், காவல் கண்காணிப்பாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அனைவரும் மாற்றப்பட்டுள்ளனர்.

ஒருபுறம் உள்துறை அமைச்சரும் மறுபுறம் ஆளுநரும் வரவழைக்கப்பட்டு சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்துவிட்டு இங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடத்த பாஜக முயற்சித்து வருகிறது.

மால்டாவில் அதிகாரிகள் கைது செய்யப்பட்டது பாஜகவின் சதியின் ஒரு பகுதி. அவர்களின் சூழ்ச்சிகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம்.

உங்களுக்கு தேவை குடியரசு தலைவர் ஆட்சியா, இல்லை திரிணாமுல் ஆட்சியா? மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் ” என்று தெரிவித்தார்.

Source link