குட்டையில் கிடந்த பெண்ணின் சட@லம்- 21 வயது இளைஞன் கொடுத்த பகீர் வாக்குமூலம்

சிவகங்கையில் 21 வயது இளைஞர் ஒருவர் 51 வயது பெண்ணை கொலை செய்து கல்குவாரி குட்டையில் வீசிச் சென்ற சம்பவத்தில் போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சொட்டதட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி(51) சில நாட்களுக்கு முன்பு அவர் காணாமல் போன நிலையில் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் சரஸ்வதி கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தனர். 

போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சரஸ்வதி சித்தாளாக பணியாற்றி வந்த இடத்தில் கொத்தனாராக பணியாற்றிய சரவணகுமார் என்ற 21 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். அப்போது சரஸ்வதியை அந்த இளைஞர் கொலை செய்து உடலை கல்லை கட்டி கல்குவாரி குட்டையில் வீசியதாக தெரிவித்ததை கேட்டு போலீசார் அதிர்ந்தனர்.

பின்னர் சிறப்பு மீட்புப்படையின் உதவியுடன் அந்த கல்குவாரி குட்டையில் கல்லில் இறுக்கி கட்டப்பட்ட நிலையில் ஆழமான பகுதியில் கிடந்த சரஸ்வதியின் உடலை மீட்டு போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து சரவணகுமாரிடம் போலீசார் விசாரித்த பொழுது, தான் கொத்தனாராக பணியாற்றி வந்த இடத்தில் சித்தாளாக பணியாற்றி வந்த சரஸ்வதியுடன் முறையற்ற தொடர்பு ஏற்பட்டதாகவும், பின்னர் அவர் தன்னை திருமணம் செய்துகொள்ள  வற்புறுத்தியதால் கொலை செய்ததாகவும் அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Source link