குண்டு காயம்பட்ட போதிலும் துணிச்சலுடன் முன்னேறிய மோப்பநாய் : டைசனுக்கு சல்யூட்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில், பாதுகாப்புப் படையினரை வழி நடத்தி சென்ற ராணுவத்தின் சிறப்புப் பிரிவு மோப்ப நாய் ‘டைசன்’ குண்டடி பட்ட போதும், முன்னேறி சென்று பயங்கரவாதிகளை கொல்லஉதவியது.

ஜம்மு காஷ்மீரின் கிஸ்திவாரில் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்துள்ளதாக வந்த பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர். அப்போது இரு தரப்புக்கு இடையே நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சைபுல்லா என்பவன் முக்கியமானவன். பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இந்நிலையில், இந்த மோதலில் ராணுவத்தின் சிறப்புப் பிரிவு மோப்ப நாய் ‘ டைசன்’ பயங்கரவாதிகளால் குண்டடி பட்ட போதும் பாதுகாப்புப் படையினரை வழிநடத்தி உள்ளது தெரியவந்துள்ளது.

டைசன் தான், வனப்பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதை முதலில்உறுதி செய்தது. அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்புப் படையினரை வழிநடத்தி முன்னேறி சென்றது. அப்போது பயங்கரவாதிகள் சுட்ட முதல் குண்டு, மோப்ப நாயின் காலில்பாய்ந்தது. காலில் காயம் ஏற்பட்டாலும், முன்னேறி சென்று பயங்கரவாதிகள் இருக்குமிடத்தை பாதுகாப்புப் படையினரிடம் காட்டிக் கொடுத்தது. ஜெர்மன் ஷெப்பர்டு ரகத்தைச் சேர்ந்த இந்த நாய்க்கு, உடனடியாக ஹெலிகாப்டர் உதவியுடன் உதம்பூரில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

இந்த மோப்ப நாய், வெடிகுண்டுகள் மற்றும் வெடிபொருட்களை கண்டுபிடிக்கவும், சந்தேகத்துக்கு இடமான இடங்களை கண்டறிவதுடன், பயங்கரவாதிகளை கண்டுபிடிக்கும் பணிக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் இந்த மோப்ப நாய் முக்கிய பங்காற்றி உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source link