பாங்காக்: ‘பியூச்சர்ஸ்’ கோப்பை குத்துச்சண்டை 2வது சுற்றில் இந்தியாவின் பிரியான்ஷ் (70 கிலோ), சாஹில் துஹான் (60 கிலோ) வெற்றி பெற்றனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், உலக குத்துச்சண்டை ‘பியூச்சர்ஸ்’ கோப்பை (19 வயது) தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 70 கிலோ பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பிரியான்ஷ் ஷெராவத், லாட்வியாவின் டைமர்ஸ் குல்பிஸ் மோதினர். இதில் பிரியான்ஷ் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
ஆண்களுக்கான 60 கிலோ பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சாஹில் துஹான், தஜிகிஸ்தானின் முகமது நசரோவ் மோதினர். இதில் சாஹில் 5-0 என வெற்றி பெற்றார். அடுத்து நடந்த 50 கிலோ பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் அம்பேகர் 5-0 என, தஜிகிஸ்தானின் ஜீன் நசரேனோவை தோற்கடித்தார்.
ஆண்களுக்கான 65 கிலோ பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் அமன் சிவாச், உக்ரைனின் ராஸ்டிஸ்லாவ் ஹோரோடின்ஸ்கியிடம் தோல்வியடைந்தார்.
