கும்பம்- 2026 தமிழ்ப்புத்தாண்டு ராசிபலன்

கும்பம்

கடமை கட்டுப்பாடு நிறைந்த கும்ப ராசியினருக்கு பிறக்கப் போகும் பராபவ ஆண்டு சங்கடங்கள் குறையக்கூடிய ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள்.

ஆண்டு முழுவதும் ராசி அதிபதி சனி பகவான் தனம் வாக்கு குடும்பஸ்தானத்தில் சஞ்சரிப்பார். 2.6.2026 முதல் குருபகவான் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார்.

ஆண்டின் துவக்கத்தில் ராசியில் சஞ்சரிக்கும் ராகு பகவான் 5.12.2026 முதல் 12ம் இடமான அயன சயன விரய ஸ்தானத்திற்கு செல்கிறார். ஏழாம் இடத்தில் சஞ்சரித்த கேது பகவான் ஆறாம் இடமான ருண, சத்ரு ஸ்தானத்திற்கு செல்கிறார்.இதனால் ஏற்பட போகும் பலன்களை பார்க்கலாம்.

பராபவ ஆண்டு பொது பலன்கள்

அதிர்ஷ்டத்தை நம்பி வாழும் ராசிகளில் கும்ப ராசியும் ஒன்றாகும். தற்போது ராசி அதிபதி சனி பகவான் தனம் வாக்கு குடும்பஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அதே நேரத்தில் குருபகவான் ஆறாமிடம் செல்வது சிறப்பித்து சொல்ல கூடிய பலன் அல்ல.

ஆறில் குரு ஊரில் பகை என்பது பழமொழி. இந்த பழமொழிக்கு ஏற்ப சில அசௌகரியங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.அசுப கிரகங்களான ராகு கேதுக்கள் வருட இறுதியில் லாப ஸ்தானத்தை யும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் இயக்குவதால் சற்று முன்னேற்றமான பலன்கள் ஏற்படலாம் ஆனாலும் குரு பகவான் ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் காலகட்டங்களில் கொடுக்கல் வாங்கலில் நிதானம் அவசியம்.

கடன் நோய், எதிரி, வழக்கு சார்ந்த விஷயங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டும். கடுமையாக உழைத்து உழைப்பிற்கான ஊதியம் நற்பெயர், அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள்.மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிய நேரம். அவசியமின்றி வேலையை மாற்றக்கூடாது. சிலருக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும்.

கமிஷன் அடிப்படையில் தொழில் புரிபவர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் உண்டு அடமான நகைகள், சொத்துக்களை மீட்பீர்கள். சிலர் கடன் பட்டு அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலர் ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்குவார்கள்.பெண்களால் காதல் மற்றும் பொருள் பணம் சார்ந்த விசயத்தில் அவமானம் உண்டு.

ஆரோக்கியத்தில் சிறு சுணக்கம் உண்டாகும். உடல்களைப்பும், சோர்வும் உண்டாகலாம் என்பதால். கவனமாக இருப்பது நல்லது.கடன் பெற்று புதிய தொழில் துவங்குவது அல்லது வியாபாரத்தில் அதிக கடனுக்கு பொருளை விற்பது போன்றவற்றை இந்த ஓராண்டு காலம் தவிர்க்க வேண்டும்.

கமிஷன் அடிப்படையிலான முதலீடற்ற தொழில் நடத்துபவர்களுக்கு மிக மிக சாதகமான பலன் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் கவனம் தேவை.

சுய தொழில் புரிபவர்கள்.தொழிலில் புதிய திட்டங்களை மாற்றங்களை சுய ஜாதக பரிசீலினைக்கு பின் செயல்படுத்துவது நல்லது.

எதிரிகளையும், நம்பிக்கை துரோகிகளையும் அடையாளம் காண்பீர்கள்.பலதலைமுறையாக விற்காமல் கிடந்த குடும்ப சொத்துக்களை கிடைத்த விலைக்கு விற்று விடலாம் என்ற எண்ணம் மேலோங்கும்.பூர்வீக சொத்து தொடர்பாக பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மிகுதியாகி வழக்கு பதியப்படலாம்.

அவிட்டம் 3, 4

மேன்மையான பலன்கள் உண்டாகும் வருடம். பங்குச் சந்தை முதலீடுகளால் உபரி வருமானம் உண்டாகும்.உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் சுப விசேஷங்கள் நடக்கும்.தொலைந்த கைவிட்டுப் போன பொருட்கள் கிடைக்கும்.

சிலருக்கு தாயார் மூலம் திரண்ட சொத்து அல்லது பெரிய அதிர்ஷ்ட தொகை கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்க ஏற்ற காலம். தாயின் உடல் நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும். அரசியல் பிரமுகர்களுக்கு தலைமையிட ஆதரவு உண்டு.திட்டமிட்டு செயல்படுவதால் காரிய ஜெயம் உண்டாகும்.நோய் பாதிப்புகள் குறைய துவங்கும்.

இழுபறியான பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவீர்கள்.பெண்கள் வேலை பார்க்கும் இடத்தை மாற்றலாம். புத்திர பாக்கியம், வீடு, வாகன யோகம் போன்ற தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களும் தேடி வரும்.திருமணம் மற்றும் சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தலாம். விலகிய குடும்ப உறவுகளின் புரிதல் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சதயம்

ராசி அதிபதிக்கு குரு பார்வை இருப்பதால் உங்கள் தோற்றத்தால் பிறரை ஈர்க்கும் சக்தியை கொடுக்கும்.வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். விசா தொடர்பான பிரச்சனைகள் சீராகும்.மதப் பற்றால் மதம் தொடர்பான ஆசிரமங்கள், இயக்கங்களில் போய்ச் சேர்ந்தவர்கள் மீண்டும் குடும்பம், குழந்தைகள் என வாழத் தொடங்குவார்கள்.

வாழ்க்கையில் அதிர்ஷ்டம் மற்றும் வெற்றி வாய்ப்பு அதிகமாகும். நீங்கள் எதிர்கொள்ளும் காரியங்களில் வெற்றியும் முன்னேற்றமும் உறுதி.தந்தை வழிப் பூர்வீகச் சொத்துக்களின் முடிவு சாதகமாகும். சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம் அல்லது பழைய தொழிலை விரிவாக்கம் செய்யலாம்.

பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள், இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும். திருமணம் மற்றும் புத்திர பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும்.வாழ்க்கைத் துணையின் ஆரோக்கிய குறைபாடு அகலும்.

பூரட்டாதி 1, 2, 3

காரிய தடைகள் நீங்கும் வருடம். கிரகங்களின் கூட்டணி கும்ப ராசியினருக்கு மிகச் சாதமாக உள்ளது.கவலைகள் அகலும் உற்சாகமாக, ஆரோக்கியமாக இருப்பீர்கள். செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். எதிர்ப்புகள் விலகும்.

குடும்ப நிர்வாகச் செலவு, வீண் விரயங்கள் அதிகமாகும்.விரும்பிய உயர் கல்வி வாய்ப்பு சிறு தடைக்குப் பிறகு சாதகமாகும். பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்ளவது சற்று கடினமாக இருக்கும். சிறு சிறு உடல் உபாதைகள் வைத்தியத்தில் கட்டுப்படும்.எதிர்மறை எண்ணங்கள் விலகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கி நிம்மதி பிறக்கும்.

வேலை பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பார்கள். எதிர்பார்த்த அதிகாரமிக்க பதவிகளைப் பெறுவீர்கள்.

திருமணம்

இரண்டாமிடமான குடும்ப ஸ்தானத்தில் நிற்கும் ராசி அதிபதி சனி பகவானை குரு பார்ப்பதால் பேசி நிச்சயித்த திருமணத்திற்கு முகூர்த்தம் குறிக்கப்படும். திருமணத் தடை அகன்று தகுதியான வரன்கள் வரும். முதல் திருமணத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறு வாழ்க்கை அமையும்.

பெண்கள்

பல வருடமாக தடைபட்ட விஷயங்கள் சுலபமாகவும் விரைவாகவும் நடந்து முடியும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவைற்றை கவனமாக கையாள வேண்டும். கோர்ட், கேஸ் பிரச்சனையால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும்.

மண வாழ்க்கை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.திருமணம், குழந்தை பேறு, கல்விச் செலவு, வீடு கட்டும் செலவு, கோவில் பிரார்த்தனை போன்ற சுப செலவு உண்டாகும்.மனக் கவலைகள் மறைந்து தம்பதிகள் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்கள். கணவரும், புகுந்த வீட்டாரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

பொருளாதாரம்

தன லாப ஸ்தான அதிபதி குரு பகவான் சஷ்ட க ஸ்தானத்திற்கு செல்வதால் சிறு சிறு ஏற்றத்தாழ்வுகள் உண்டாகும். கடன் பெற்றாவது வீடு, வாகன யோகம் கிடைக்கப் பெறுவீர்கள். பொருளாதார நிலையில் அவ்வப்போது சிறு சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் சமாளித்து விட முடியும்.

வீடு, வாகன, சொத்து யோகம் உணடாகும்.கொடுத்த கடன்கள் வசூலாகும்.பேச்சை தொழிலாக கொண்ட ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் , கமிஷன் ஏஜென்ட்கள், ஜோதிடர்கள், வக்கீல்கள் போன்றவர்களுக்கு தேவைக்கு மிகுதியான உபரி வருமானம் கிடைக்கும்.

பரிகாரம் வியாழக்கிழமை குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சித்து வழிபடவும்.

Source link